யாழ்ப்பாணக் கலாச்சாரத்திற்கு என்ன நடந்தது?சிறப்புக் கட்டுரை ஒரு முறை படித்துப் பாருங்கள்!

யாழ்ப்பாணக் கலாச்சாரத்திற்கு என்ன நடந்தது?சிறப்புக் கட்டுரை ஒரு முறை படித்துப் பாருங்கள்!

யாழ்ப்பாண கலாச்சாரத்திற்கு என்ன நடந்தது? எனும் இதே தலைப்பில் ஐந்து வருடங்களுக்கு முன்னதாகவும் அதாவது இறுதி யுத்தம் முடிவடைந்து சரியாக ஒரு வருடத்தின் பின்னரும். அதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவும் இரண்டு ஆசிரியர் தலையங்கள் எழுதப்பட்டு இன்று அதே தலைப்பில் இன்னுமொரு தலையங்கத்தை எழுதும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அந்தளவிற்கு அங்கு இடம் பெற்றுவரும் சில சம்பவங்கள் அமைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.

Yogoo-Arunakiri

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட் டதன் பின்னர் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் திட்டமிட்ட முறை யில் பலவிதமான கட்டுப்பாடுகளுக்குள் ஒரு வகையில் புலிகள் மற்றும் படைத்தரப்பினரின் ஒருவகையான அடக்கு முறைக்குள் தள்ளப்பட்டிருந்த மக்கள் அதிலிருந்து விடுபட்டதும் புதியதொரு சுதந்திரமான சூழலுக்கு முகங்கொடுத்தபோது அதனைப் பயன்படுத்திச் சிலர் அங்கு கலாசார சீரழிவை ஏற்படுத்த முனைந்தனர். அது அங்கிருந்த கற்ற சமூகத்தினால் ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டது.

murder_jaffna_006

அதன் பின்னர் மீண்டும் அங்கு கலாசார சீரழிவை ஏற்படுத்த அதிகார வர்க்கமுள்ளவர்களின் ஆதரவுடன் சில முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டது. அப்போதும் கற்ற சமூகமே தலையிட்டு அவற்றைத் தடுத்து நிறுத்தியது. இப்போது மூன்றாவது முறையாக அங்கு மீண்டும் கலாசார சீரழிவு நிலை புதிய வடிவத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்முறை முன்னரைப் போல் அங்கு இதனைப் பரப்ப எவரும் முயற்சிக்கவில்லை. மாறாக அங்குள்ளவர்களில் சிலரே இதற்குக் காரணமாக அமைந்து வருகின்றர்.

அங்கு இப்போது வாள் வெட்டுக் கலாசாரம், திருட்டு மற்றும் ஏமாற்றுத் திருமணங்கள், கொடுக்கல் வாங்கல்களில் நாணயமற்ற தன்மைகள், கொலைகள், அடாவடித்தனங்கள், பெண்களைக் கேலி செய்யும் நிலை, குழுக்களிடையேயான மோதல்கள் என எல்லை மீறிய கலாசார சீரழிவுச் சம்பவங்கள் இடம்பெறுவது பதிவாகியுள்ளன. சில சமயங்களில் பொலிஸாரால் கூட கட்டுப்படுத்த முடியாத வன்முறைச் சம்பவங்களும் அங்கு இடம்பெற்று வருகிறது.

nallur

இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பாதிக்கப்படப் போவது யார்? இவற்றை பொலிஸார் எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறார்கள்? எனும் கேள் விகள் எழும் நிலையில் விடுதலைப் புலிகளைப் போன்று பொலிஸாரும் சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டுமெனும் கோரிக்கை கற்ற சமூகத்தினால் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அது முடியாது. புலிகள் கடைப்பிடித்தது காட்டுச் சட்டம் என பொலிஸ் தரப்பில் கூறப் பட்டாகிவிட்டது. அதில் உண்மையும் உள்ளது.

இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்த அசாதாரண நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அவ்வாறு பொலி ஸார் கடும் போக்கைக் கடைப்பிடித்து சட்டத்தை நிலை நாட்ட முயன் றாலும் அதனை விரும்பாதவர்களும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் பொலிஸாரில் பலர் சிங்கள மொழி பேசுபவர் களாக இருப்பதனால் அதனை அங்குள்ள சிலர் விரும்புவதில்லை. பொலிஸில் இணைந்து உங்களது பகுதியில் சேவையாற்றுங்கள் என அழைத்தாலும் எவரும் பெரிதாக இணைந்து கொள்வதுமில்லை. உண் மையில் புலிகளின் காலத்தில் களவு, பொய், கலாசார சீரழிவுகள் பெரிதாக இடம்பெறவில்லை எனச் சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள அவர்கள் வழங்கிய அதிக பட்ச தண்டனையே காரணமாக இருந்தது. சில குற்றங்க ளுக்கு அவர்கள் தெருவோரமுள்ள மின்சார கம்பத்தில் குற்றமிழைத் தோரைக் கட்டி வைத்து அவர்கள் செய்த குற்றத்தை மட்டையில் எழுதி அதை அவர்களது கழுத்திலேயே மாட்டி முழு நாளும் நிற்க வைத்து விடுவார்கள். அதுவே அதிகபட்ச கொலைக் குற்றமாக இருந்தால் அதே மின் கம்பத்தில் கட்டிவைத்துச் சுட்டுக் கொன்றும் விடுவார்கள். இவை எவ்வகையிலும் நாட்டுச் சட்டத்திற்குப் பொருந்தாது.

பின்னர் புலிகளிடமிருந்து படையினரால் யாழ்ப்பாணம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் படையினர் சந்திக்குச் சந்தி காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்தபோதும், காவலரண்கள் அமைத்துக் காவல் காத்த வேளையிலும் இத்தகைய திருட்டுக்களோ, வாள் வெட்டுச் சம்பவங்களோ அல்லது வேறுவிதமான சீரழிவுகளோ பெரிதாக இடம் பெறவில்லை என்று கூறினாலும் அதனை ஆமோதிப்பவர்கள் நிச்சயம் யாழ்ப்பாணத்தில் இன்றும் உள்ளனர். அதற்காக இராணுவம் முன்னர் போன்று மக்கள் வாழும் பகுதிகளில் முழத்திற்கு முழம் நிற்பதையும் ஏற்க முடியாது.

இப்போது புலிகள் இல்லை, இராணுவத்தின் பெரும்பகுதியான முகாம் கள் மற்றும் காவலரண்கள் மூடப்பட்டுக் கொண்டு வருகிறது. இது குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பெரும் வசதியாகி விட்டது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது பொலிஸார் முன்பாகவுள்ள பாரிய பொறுப்பாகவுள்ளது. உண்மையில் அவர்கள் தமது கடமையைச் சரிவரச் செய்கிறார்கள். வடக்கில் கடமையாற்றும் பொலிஸாரின் தொண் ணூறு சதவீதமான பொலிஸாருக்கு தமிழ் நன்கு தெரியும். மக்கள் தமது முறைப்பாடுகளைத் தமிழிலேயே கொடுக்கலாம். வடக்கில் இராணுவத்தி னரும் சிவில் கடமைகளில் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கலாம் என்பதாக வர்த்தமானி அறிவித்தலும் உள்ளது.

எனவே பொதுமக்கள் தமது பிரதேசத்தில் ஏற்படுகின்ற குற்றச் செயல் களை இவர்களை வைத்துத் தீர்த்துக் கொள்ளவேண்டும். இதனை விடுத்து புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா என இனியும் கதைத்துக் கொண்டிருப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. அத்துடன் வடக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபை இப்போது புதிய அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமாக இயங்குகிறது. அதில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தமக்குள்ள சில அதிகாரங்களைக் கையிலெடுத்து பொலிஸாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இதற்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்து உங்களைத் தமது பிரதி நிதிகளாகத் தேர்தெடுத்தனர். மாகாண சபைக் கூட்டங்களில் பங்கெடுப் பதும், ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதும் மட்டுமல்ல உங்களது பணி. களத்தில் நின்று மக்கள் குறைகளைக் கேட்டறிந்து பொலிஸார் மூலமாக அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் கடிதம் எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடாது இனியாவது உங்களது அதிகாரங்கள் என்ன என்பதை அறிந்து செயற்பட முன்வர வேண்டும்.

யாழ்ப்பாணத்திலே உருவான உயர்வான தமிழர் கலாசாரம், பண்பாடு, உபசரிப்பு, ஒற்றுமை எல்லாவற்றுக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது ஒவ்வொருவர் மனங்களிலும் எழ ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் அங்கு அண்மைக் காலமாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளே! அதுவும் தமிழ் மக்கள் வெட்கித் தலை குனியும் அளவிற்கு மிகவும் தரக்குறைவான துர்நடத்தைகள் தொடர்பான செய்திகள் உலகெங்கிலும் வாழ்கின்ற முழுத்தமிழ்ச் சமூகத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது.

ஒரு காலத்தில் யாழ்ப்பதாணத்தாரைப் பார்த்து எமது பழக்க வழக் கங்களை மாற்றிக் கொள்ளக் கற்க வேண்டும் என்று ஏனைய பிரதேச மக்கள் விரும்பியதுண்டு. ஆனால் இன்று அதே யாழ்ப்பாணத்தில் நடப்பவற்றைக் கேட்டால் அப்பகுதிக்குச் சென்று வந்தாலே தீட்டு என்ப தாக உள்ளது. கோயில், குளம், தீர்த்தம் என்று பண்பாட்டு விழுமியங் களுடன் மிளிர்ந்த யாழ்ப்பாணம் இப்போது பீச், ஹோட்டல், லொட்ச் என்று களியாட்டப் பிரதேசமாக மாறி வருகிறது.

எது எவ்வாறிருப்பினும் சிறந்த கல்வியறிவும், கலாசார பண்பாடும் கொண்ட யாழ்ப்பாண சமூகத்திலிருந்து இவ்வாறான கலாசார சீர்குலைவுச் செய்திகள் வெளிவருவது ஒட்டுமொத்தமாக அப்பிரதேச மக்கள் அனைவருக்கும் இழிவை ஏற்படுத்துகிறது. எனவே இதற்குக் காரணமாக சக்திகளை அல்லது தனிநபர்களைக் கண்டு பிடித்துச் சட்டத்தின் முன்னால் நிறுத்துவது அனைவரதும் தலையாய கடமையாக உள்ளது.

நன்றி-தினகரன் இணையம்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux