அல்லைப்பிட்டியில் அழிவிலிருந்த,ஓர் ஆலயத்தின் தற்போதைய தோற்றத்தினைப் பாருங்கள்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அழிவிலிருந்த,ஓர் ஆலயத்தின் தற்போதைய தோற்றத்தினைப் பாருங்கள்-படங்கள் இணைப்பு!

image-c5d0b74b0a7c21743b04a811693c3ec11253f186236c7a304988a98a1833363b-V

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தினை புனரமைத்து -மக்களின் வழிபாட்டிற்கு வழி செய்து கொடுப்பதற்காகவும்-மிகப் பழைமையான இவ்வாலயத்தினை அழிய விடாமல் பாதுகாப்பதற்காகவும்-அல்லைப்பிட்டி மக்களுடன் இணைந்து அல்லையூர் இணையம் மேற் கொண்ட விடாமுயற்சியின் பயனாக-தற்போது ஆலயப்புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்-ஆலயத்திற்கான சுற்றுமதில் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

பல இலட்சம் ரூபாக்கள் செலவில் ஆலய சுற்றுமதிலினை   திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள்  அமைத்துத் தந்துள்ளார்.

திரு எஸ்.ஆர் அவர்கள் அறப்பணிக்கும்,ஆலயப்பணிகளுக்கும் தொடர்ந்து உதவிவருவதுடன்-ஊர் மக்களுக்கும் உதவிகளைச் செய்து வருபவர் என்பதனையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

அல்லையூர் இணையத்தினால் இதுவரை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நம்மவர்களிடமிருந்து  ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபாக்கள் திரட்டப்பட்டு-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மூலம் ஆலய நிர்வாகத்தின் பொருளாளரிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தியினை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோள்

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் அல்லைப்பிட்டி மக்கள்-சிந்தாமணிப் பிள்ளையாரின் ஆலய புனரமைப்புக்கும்-எதிர்வரும் ஆவணி மாதமளவில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கும் உதவிட முன்வருமாறு உரிமையோடு அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

image-a9d930ea2a4368932e00865e844dcc02cee7a72fa542c7d8e333a2dc5cc3e1ad-Vimage-4c18550d999cabb6d8dbdb7744b976b8a95375779967de1ab1c6a55d203ce334-V 1978578_868788143155636_6563685759205662709_oimage-920a77039dcc95aba92a06af771d359732e3ed0809146d8ad74c88b8a12e728b-V image-c95ac8cf3382d9962751962081465bb30055df7b9d7490edc837188426b7c9af-V image-fbfa92031b1ef223635e015526fe3bd76349235d16e677cdf162cd3735f21652-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux