இலங்கை அரசாங்கத்தின் நேரடி நிதித்திட்டத்தின் கீழ்-குறிப்பிட்ட பாடசாலைகள் தோறும் தொழிற் பயிற்சிக் கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக,யாழ் தீவகத்தில் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வரும்-வேலணை மத்திய கல்லூரி வளாகத்திலும்,பல அடுக்குமாடிகளைக் கொண்ட தொழிற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வருடத்திற்குள் இதன் கட்டிடப்பணிகள் நிறைவு பெற்று-அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மாணவர்களுக்கான,தொழிற் பயிற்சிகள் ஆரம்பி்க்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்பயிற்சிக் கூடத்தின் கல்விசார் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில்,தீவகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும்,பெருமளவு மாணவர்கள் தொழிற்பயிற்சி பெற முன்வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீவகம் வேலணை மத்திய கல்லூரியில்,நீண்ட காலமாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும்-மாணவர்களின் தொகைகேற்ற,ஆசிரியர்கள் இல்லாமையால் மாணவர்கள் கல்வி கற்க சிரமப்படுவதாகவும்- ஆசிரியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு- இதுவரை எந்த விதமான நடைவடிக்கையும் சம்மந்தப்பட்டவர்கள் எடுக்க முன்வரவில்லை என்றும் பெற்றோர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.