தீவகத்தில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட உல்லாசவிடுதி ஒன்று அல்லைப்பிட்டியில் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது- நீங்கள் எமது இணையத்தின் ஊடாகஅறிந்த செய்தியாகும்.
இந்த உல்லாச விடுதியானது -அல்லைப்பிட்டி இந்து மயானத்திற்கு மிக அருகிலும்-அல்லைப்பிட்டி தெற்குக் கடற்கரையோரமாகவும், மிக நேர்த்தியுடனும்,மிக அழகாகவும் அமைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த உல்லாச விடுதியின் பழைய நிர்வாகம் மாற்றப்பட்டு-தற்போது புதிய நிர்வாகத்தின் கீழ் உல்லாச விடுதி சிறப்பாக இயங்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.
யாழ்-ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் பிரதான வீதியானது -அல்லைப்பிட்டிச் சந்தி வரை காபட் வீதியாக மாற்றப்பட்டுள்ளதனால்-யாழிலிருந்து உல்லாசவிடுதிக்கு தங்க வருபவர்களின் பயண நேரம் 10 நிமிடங்களாக குறைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டியில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த உல்லாச விடுதியினால் எதிர்காலத்தில் இக்கிராமமக்களுக்கு என்னபயன்? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.