அல்லைப்பிட்டியில் பல லட்சம் ரூபாக்களில் அமைக்கப்பட்ட வியாபார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி மத்திய பகுதியில் பல இலட்சம் ரூபாக்கள் செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்ட வியாபார நிலையங்கள் (கடைத்தொகுதிகள்)

திறந்து வைக்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி ஊடாகச் செல்லும் பிரதான வீதியிலேயே இந்த வியாபார நிலையங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
லண்டனில் வசிக்கும் வர்த்தகரான-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவருமாகிய-திரு சுரேந்திரன் அவர்களினாலேயே இந்த வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இக்கடைத் தொகுதியில் தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய கணணி மையம்-சிகை அலங்கரிப்பு நிலையம்-மற்றும் உணவகம் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்-மிக விரைவில் வெதுப்பகம் (பேக்கரி)மில் ஆகியனவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்-இதன் உரிமையாளர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.


மேலதி தகவல்கள் விரைவில் விபரமாகப் பதிவு செய்யப்படும்.

Leave a Reply