தீவகம் நயினாதீவு தீர்த்தக்கரையில் அமைந்திருந்த அந்தியேட்டி மடத்தினை,நயினாதீவு மண்ணின் மைந்தரும்,சமூக சேவையாளருமாகிய,திரு சிவப்பிரகாசம் முருகவேள் அவர்கள் தனது நிதியிலும்,மேற்பார்வையிலும் மிக அழகாக புனரமைத்துக் கொடுத்துள்ளார்.
நயினாதீவின் தீர்த்தக்கரையில் அமைந்திருந்த அந்தியேட்டி மடமானது-நீண்டகாலமாக,புனரமைக்கப் படாமல் விடப்பட்டு இருந்த நிலையில் -சமூக சேவையாளருமாகிய,திரு சிவப்பிரகாசம் முருகவேள் அவர்களினால் மிக அழகாக புனரமைக்கப்பட்டுள்ளது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தியேட்டி மடத்தினை,புனரமைத்துத் தந்த திரு சிவப்பிரகாசம் முருகவேள் அவர்களுக்கு-நயினாதீவு மக்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
நிழற்படங்கள்-தகவல்கள்……
நயினை எம்.குமரன்