மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 2ம் ஆண்டுத் திதி 29-04-2015 புதன்கிழமை அன்று-லண்டனில் அமைந்துள்ள அன்னாரின் புதல்வர் திரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் இரண்டு அறப்பணி நிகழ்வுகளை நடத்துவதற்கு-அன்னாரின் புதல்வர்களின் நிதியுதவியுடன் அல்லையூர் இணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய,மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்களின் சார்பில்,அன்னாரின் குலத் தெய்வமான,மண்டைதீவு கண்ணகை அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்ட-பூம்புகார் கண்ணகை அம்மனின் பரிபாலன தெய்வமான வைரவர் ஆலயம் -அன்னாரின் புதல்வர்களின் நிதியினால் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும் உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.