மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 22-05-2015 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்-ஊர்மக்களுடன் இணைந்து ஆலய பரிபாலன சபையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களின் ஆதரவுடன்-புலம் பெயர்ந்து பலநாடுகளில் வாழும் மண்டைதீவு மக்களின் நிதிப் பங்களிப்புடன்-அழகான வேலைப்பாடுகளுடன் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு வருகின்றது-தற்போது ஆலயத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மேலும்அறியமுடிகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆலய பரிபாலன சபையினரும்-பொதுமக்களும்,ஆலய முன்றலில் ஒன்று கூடி கும்பாபிஷேகத்திற்கான திகதியினை ஏகமனதாக தெரிவு செய்திருந்தனர்.
அன்றைய தினம் கைத் தொலைபேசி ஊடாக பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களில் சிலவற்றை,கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
எமது நாட்டை ஆண்ட அந்நியர்களான,போத்துக்கீசர்,ஒல்லாந்தரால்,அன்று அழிக்கப்படாமல்-வணங்கப்பட்டதாக,எம் முன்னோர்களால் கூறப்பட்டு வரும்-புதுமை மிக்க மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் கும்பாபிஷேக விழாவில் அனைவரையும் கலந்து கொண்டு -அம்மனின் அருள் பெற்றுய்யுமாறு அழைக்கின்றனர்-மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையினர்.