நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள், சுற்றுலா பயணிகள் குவிந்திருந்த காட்மாண்டுவின் அடையாளச் சின்னமாக கம்பீரமாக வீற்றிருந்த 183 ஆண்டு கால பழமையான தாரஹரா கோபுரம் உட்பட நேபாளத்தின் பழமையான கட்டிடங்கள் உட்பட பெரும்பாலான கட்டுமானங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியல் இந்தியாவில் இருந்து சென்றுள்ள பேரிடர் மீட்பு குழு மற்றும் நேபாள நாட்டின் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இடிந்து தரைமட்டமாக கட்டிடங்களை தோண்ட தோண்ட பிண குவியல்களாக இருப்பதை கண்டு மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் நேபாளத்தில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2,200 ஆக உயர்ந்துள்ளது. தொடர் பின்னதிர்வுகள் காரணமாக தேசிய அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.