அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் வைத்தி அருளானந்தம் அவர்கள்-தனது 81வது பிறந்த நாளினை,கனடா வன்கூவர் மாநிலத்தில் அமைந்துள்ள இல்லத்தில் -மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் உறவினர்களுடன்-மிக எழிமையாகக் கடந்த 15-04-2015 அன்று கொண்டாடினார்.
அல்லைப்பிட்டியில் வாழ்ந்த,மிகக்கடினமான உழைப்பாளிகளில் ஒருவராக பெரியவர் அருளானந்தம் அவர்கள் ஊர்மக்களால் நன்கு அறியப்பட்டவர். தான் கஸ்ரப்பட்ட போதிலும்-தனது பிள்ளைகள் அனைவரையும் தொடர்ந்து கல்வி கற்க வைத்து வெற்றியும் கண்டவர்-
ஊரில் கடுமையாக உழைத்து முன்னேறிய பெரியவர் அருளானந்தம் அவர்கள் -தான் ஆசையாகக் கட்டிய,வீட்டையும்-ஊரையும் விட்டுவெளியேறி -மனைவி,பிள்ளைகளோடு கனடாவில் நீண்டகாலமாக வசித்து வருகின்றார்.
புலம் பெயர்ந்த மண்ணில் அனைத்து வசதிகளோடு எந்தவிதமான குறைகளும் இன்றி வாழ்ந்து வருகின்ற போதிலும்-தான் வாழ்ந்த,ஊரை நினைத்து மனம் வருந்துவதாகவே தெரிய வருகின்றது.
பெரியவர் அருளானந்தம் அவர்கள்-நீண்ட ஆயுளோடும்,ஆரோக்கியத்துடனும்,வாழ எல்லாம் வல்ல ஆண்டவன் துணை புரிய வேண்டும் என்று அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.
இனித்தான் முக்கிய விடயத்திற்கு வருகின்றோம்
பெரியவர் அருளானந்தம் அவர்களுடைய,அன்புப் பேத்தி செல்வி நிதிலா……
இவர் சுவிஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி கற்று வருகின்றார்-நான்கு மொழிகளை கற்று வரும் நிதிலாதான் பிறந்து மூன்று வயது வரை வளர்ந்த,அல்லைப்பிட்டிக் கிராமத்திற்கு, அண்மையில் சுவிஸின் பிரபல தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்கள் இருவருடன் சென்று திரும்பியிருந்தார்.
அல்லைப்பிட்டியில் தான் பிறந்து வளர்ந்த,வீட்டையும்-வளவையும் பார்த்து கண்கலங்கி நின்றவர்-தனது உறவினர்களுடன் உரையாடி-அருகிருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்களுடனும்-உரையாடியவர்-இறுதியாக மண்ணை முத்தமிட்டு-அதனை அள்ளி எடுத்து வந்து-சுவிஸில் வசிக்கும் பெற்றோர்களின் கரங்களில் ஒப்படைத்து அன்பையும்,மண்பற்றையும் வெளிப்படுத்தி நின்றார்.
சுவிஸிலிருந்து,அல்லைப்பிட்டி வரை சென்று திரும்பிய,செல்வி நிதிலா அவர்களின் உணர்வுபூர்வமான இப்பயணத்தினைப் பதிவு செய்த சுவிஸ் RSI என்ற தொலைக்காட்சி அண்மையில் தனது தொலைக்காட்சி நிகழ்சியில் ஒளிபரப்பு செய்தது.இந்நிகழ்ச்சியினை இலட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டதாகவும் மேலும் அறியமுடிகின்றது.
செல்வி நிதிலா அவர்கள்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,கவிஞர்,சோதிடர்,அருள் தெய்வேந்திரம் அவர்களின் அன்புப் புதல்வியாவார்.
கீழுள்ள முகவரியினை கொப்பி பண்ணி அழுத்தி வீடியோவினை பார்வையிடுங்கள்
http://www.rsi.ch/news/ticino-
பாசம் என்பது இதயத்தில் இருந்து உருவாவது…
இரக்கம் என்பது இதயமும், மூளையும் இணையும் போது உருவாவது…
அன்பு என்பது அறிவிலிருந்து பிறப்பது…
பிறசினேகிதம் என்பது இறைபக்தியில் இருந்து பிறப்பது…
நாட்டுப்பற்று என்பது காலின் பாதத்திலிருந்து வலிமையோடு தொடர்வது…
சேவை என்பது மனதோடு நின்று தெளிவோடு நிதானமாகச் செயல்படுவது…