அட்சய திருதியை முன்னிட்டு 21-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
இத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் நகைகளை வாங்குவதற்காக யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் குவிந்ததாக மேலும் அறியமுடிகின்றது.
நகைக் கடை உரிமையாளர்களினால்,நகைகளை கொள்வனவு செய்பவர்களுக்கு விஷேட பரிசுகள் என்று விளம்பரம் செய்யப்பட்டதனை தொடர்ந்து மேலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் -இன்றைய தினத்தில்
22 கரட் உடைய ஒரு பவுண் நகை 43,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் என்றும் இல்லாத வகையில்-தங்க ஆபரண விற்பனைத் திருவிழாவாகவே அட்சய திருதியைத் தினம் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிழற்படங்கள்-திரு I.சிவநேசன்