அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள-திரு சோ.ராஜன்சேதுபதி அவர்களுக்குச் சொந்தமான கட்டிடத்தில் -அண்மையில் அறநெறி வகுப்பு ஒன்றினை நடத்துவதற்கான ஆரம்ப நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலர் மஞ்சுளா ரதீசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இவருடன் அல்லைப்பிட்டி கிராம அலுவலர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் அவர்களும்,மற்றும் அல்லைப்பிட்டியில் இயங்கும் இரண்டு பாடசாலைகளின் அதிபர்களும்-மற்றும் சமூக ஆர்வலர் திரு கேதாரநாதன்- பெரியவர் அல்பிரட் ஜோஜ் -மற்றும் மாதர் சங்கத்தலைவி எனப் பலர் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.