தீவகம் புங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) ஆலயத்தின் வருடாந்த,மகோற்சவம் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.வரும் 02-05-2015 சனிக்கிழமை அன்று காலை தேர்த்திருவிழாவும்,மறுநாள் 03-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தினால் கடந்த வருடத் தேர்த் திருவிழாவின் போது நிழற்படங்களைப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு இணைத்திருந்தோம்.அதேபோல் இவ்வருடமும் நிழற்படங்களை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.
புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த ,தேர்த்திருவிழாவின் வீடியோப் பதிவினை மேற் கொள்வதற்கு-தேவையான அனுசரணையினை வழங்க பக்தர்கள் யாராவது முன்வந்தால் எம்மோடு தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.0033651071652
நிழற்படங்கள்-திரு I.சிவநாதன் வேலணை