கடந்த கால யுத்த அனர்த்தங்களின் கோரப் பிடியிலிருந்து மீண்டெழுந்த மண்டைதீவுக் கிராமம் -தற்போது வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது.
மண்டைதீவுச் சந்தியிலிருந்து,திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயம் வரை செல்லும் பிரதான வீதியானது – முழுமையான காபட் வீதியாக மாற்றப்பட்டுள்ளதுடன்-கிழக்குக் கடற்கரைக்குச் செல்லும் வீதியும் தார் வீதியாக மாற்றப்பட்டுள்ளது.இதை விட ஊருக்குள் செல்லும் சிறு வீதிகளும் தொடர்ந்து புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இனி வரும் காலங்களில் மண்டைதீவு மக்களின் வாழ்வு சிறந்து, பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டு,எல்லா வகையிலும் மேலோங்கி சிறப்புற்று விளங்க- எல்லாம் வல்ல மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகரையும்,மண்டைதீவு புனித பேதுருவானவரையும் வேண்டி நிற்கின்றோம்.
அண்மையில் மண்டைதீவில் திறந்து வைக்கப்பட்ட பிரதேச மருத்துவ மனையின் சேவையினால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.