யாழ்ப்பாணத்திலிருந்து தீவகம் ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் பிரதான வீதி, அகலப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றப்பட்டு வருகின்றது.
ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் இவ்வீதியில் சிறியதும் பெரியதுமாக பல பாலங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுவருகின்றன.
பண்ணைப்பாலத்திற்கும்-மண்டைதீவுச் சந்திக்கும் இடையில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இரண்டாவது பெரிய பாலம்-கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும்-அதற்கு முன்னர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுவழியில் வாகனங்கள் போக்கு வரத்தினை மேற்கொண்டிருந்ததாகவும் அறிய முடிகின்றது.
இதே போல் மிகப் பழைமையான பண்ணைப்பாலமும் புனரமைக்கப்படுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.