வேலணை கிழக்கு செட்டிபுலம் காளவாத் துறை அருள்மிகு ஸ்ரீ ஜயனார் திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவம் 15-04-2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
எதிர் வரும் 21-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ள ஏழாம் திருவிழாவின் போது முதல் தடவையாக இவ்வாலயத்தில் தீமிதிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக,ஆலய நிர்வாகத்தினால் தெரிவிக்கப்படுகின்றது.
அதைத் தொடர்ந்து வரும் 23-04-2015 வியாழக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று தீர்த்த்திருவிழாவும் இடம் பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.