வேலணை செட்டிபுலம் காளவாய் துறை ஜயனார் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு!

வேலணை செட்டிபுலம் காளவாய் துறை ஜயனார் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு!

s (1)

வேலணை கிழக்குக் கடற்கரையின் புகழ் பூத்த புனித இடமென,மூன்று மதத்தவர்களும் வழிபடும் ( இந்து ,கிறிஸ்தவம்,இஸ்லாம்)வெள்ளைக்கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள,செட்டிபுலம் காளவாய் துறையில் கடலை நோக்கி வீற்றிருக்கும் ஆலயமே அருள்மிகு ஜயனார் திருக்கோவில் ஆகும்.

இவ்வாலயம் தமிழர் வரலாற்றில் தடம் பதித்த ஆலயமாகும்.இவ்வாலயத்தின் தோற்றம் கடைசிதமிழ் மன்னன் சங்கிலியன் காலத்தோடு தொடர்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.பல இன்னல்களைக் கண்ட ஆலயம்-தற்போது புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவோடு காட்சி தருகின்றது.

இவ்வருடம் முதல் வருடாந்த பெருந்திருவிழா நடைபெறவுள்ளது.இதற்கு முன்னோடியாக,கொடிக்கம்பம்-கட்டுத்தேர் என்பன சுமார் 15 இலட்சம் ரூபாக்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.கோவிலின் உட் பிரகாரத்தில் உப விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு 10-04-2015 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதன் பெருந்திருவிழா 15-04-2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,23-04-2015 அன்று புதிய தேரில் ஜயனார் வீதியுலா வரும் காட்சியும்-மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது சிறப்பாகும்.

s (3) s (4) eeeeeeeeeeeeeeeeee s (6) s (7) s (8) (1) s (8) s (9) s (12) s (13) s (14) s (15) s (16) s (17) s (18) s (19) s (21) s (22) s (23) s (24)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux