இந்த வருடத்தின் முதல் சந்திரகிரகணம் சனிக்கிழமை பி . ப 3;45 மணிக்கு ஆரம்பமாகி -இரவு 7;15 மணிக்கு நிறைவு பெற்றது.
இச்சந்திரகிரகணத்தினை,தீவக மக்கள் கண்டு கழித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.நயினாதீவிலும்,வேலணையிலும் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
சந்திரகிரகணம்
வானில் நிகழக்கூடிய மாற்றங்களில் சூரிய கிரகணம், சந்திரகிரணம் ஆகியவை அடிக்கடி நிகழக்கூடியவை ஆகும்.
பெரும்பாலான சமயங்களில் இந்த கிரகணங்களை எல்லா நாடுகளிலும் காண முடிகிறது. சில சமயங்களில் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் காணலாம். சந்திரகிரகணம் ‘கருநிழல் சந்திரகிரகணம்’, ‘புறநிழல் சந்திரகிரகணம்’ என இருவகைப்படும். பெரும்பாலும் புற நிழல் சந்திரகிரகணம்தான் நிகழ்கிறது. எப்போதாவதுதான் கருநிழல் சந்திரகிரகணம் வருகிறது. பூமியின் நிழல் சந்திரனை கடந்து செல்லும்போது சந்திரன் முழுமையாக மறைந்துவிடுகிறது. இந்த வருடத்தின்முதல் சந்திரகிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நிழற் படங்கள்
நயினை-எம்.குமரன்
வேலணை-I.சிவநேசன்