யாழ் தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில்-புதிதாக அமைக்கப்பட்டுள்ள வைரவருக்கும்-ஜம்பதடி உயரத்தில் மிகப் பிரமாண்டமாக,அழகிய வேலைப்பாடுகளுடன்-அமைக்கப்பட்டுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கும்-மகா கும்பாபிஷேகம் 03-04-2015 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
அல்லையூர் இணையத்தில் 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்-எம்பெருமானின் வருடாந்த,மகோற்சவத்தின் பத்துத் திருவிழாக்களையும் நிழற்படங்களாக,வீடியோப் பதிவுகளாக,பதிவு செய்து அன்றைய தினமே பார்வையிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன-என்பதனை அறியத்தருகின்றோம்.
அல்லையூர் இணையத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து-நாம் மேற்கொண்டு வரும் அறப்பணிக்கும்,ஆலயப்பணிக்கும்,பேராதரவு வழங்கி வரும் அனைவருக்கும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பேரருள் கிடைக்க வேண்டுகின்றோம்.
நிழற்படப்பதிவு-I.சிவநேசன்-வேலணை
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!