வேலணை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற, உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவமும்,முதல் அமர்வு நிகழ்வும்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற, உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவமும்,முதல் அமர்வு நிகழ்வும்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

3- (1)

வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவமும்,முதல் அமர்வு நிகழ்வும்-02-04-2015 வியாழக்கிழமை அன்று காலை  10 மணிக்கு,கல்லூரியின் முதல்வர் திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக,வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரும்,வேலணையின் மைந்தனுமான திரு சி.சத்தியசீலன் அவர்கள் கலந்து கொண்டார்.

இவருடன் சிறப்பு விருந்தினர்களாக,திரு தி.யோன் குயின்ரஸ்(தீவக வலயக் கல்விப் பணிப்பாளர்)அவர்களும்,இக்கல்லூரியின் பழைய மாணவரும்,ஓய்வு நிலை  மேல் நீதிமன்றப் பதிவாளருமாகிய,திரு க.வ.கணேசன் அவர்களும்-திரு தெ.நதீஸ்(யாழ் சமூக செயற்பாட்டு மையம்)அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.இவர்களுடன் ஓய்வு நிலை ஆசிரியர் திரு சிவலிங்கம் அவர்களும்,வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சி.சிவராசா அவர்களும்,பழைய மாணவர் சங்கக்கிளை-பிரான்ஸ் நாட்டின் தலைவர் திருமதி பரராசசிங்கம் திலகவதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய,வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அவர்கள்-தமது உரையில் ஊர் ஞாபகங்களை மீட்டியதுடன்-கல்லூயில் ஏற்பட்டுள்ள ஆசிரியர்களின் பற்றாக்குறையினை-தமது அமைச்சின் மூலம் நிவர்த்தி செய்ய முயற்சிப்பதாகவும் கூறினார்.

இப்பாராளுமன்றத்தின் மூலம் மாணவர்கள் சிறந்த,தலைமைத்துவத்தையும்-பண்புகளையும் பெற்றுக் கொள்வதுடன்-இக்கிராமத்திற்கும்,பாடசாலைக்கும் நல்ல சேவைகளைச் செய்ய முடியும் என்று நம்புகின்றேன் என்று பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இறுதியாக மாணவர் பாராளுமன்றத்தின் சபாநாயகர்-பிரதி சபாநாயகர்-பிரதமர்-உறுப்பினர்கள் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்தனர்.பின்னர் இவர்கள் அனைவருக்கும் பிரதம விருந்தினரால் சின்னம் சூட்டப்பட்டது.அதன் பின்பு சம்பிரதாய முறைப்படி பாராளுமன்றம் பிரதான மண்டபத்தில் கூட்டப்பட்டது.

இப் பாராளுமன்றத்தில் 10 அமைச்சர்களும்,10 பிரதி அமைச்சர்களும், பிரதி சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் மற்றும் பிரதி செயற்குழுத் தலைவர் உட்பட 73 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

தகவல்-நிழற்படங்கள்-I.சிவநேசன் வேலணை

3- (2) 4 (1) (1) 4 (2) 4 (3) 4 (6) 4 (7) 4 (9) 4 (10) 4 (11) 4 (12) 4 (13) 4 (14) 4 (15) 4 (16) 4 (17) 4 (23) 4 (24) (1) 4 (19) 4 (25) 4 (26) 4 (27) 4 (28) 4 (45) 4 (29) 4 (36) 4 (30) 4 (33) 4 (35) 4 (32) 4 (21) 4 (20) 4 (22) 4 (37) 4 (38) 4 (39) 4 (40) (1) 4 (41) 4 (42) 4 (43) 4 (44) a (1) (2) a (2) (2)a (3) (1) a (4) (1) 4 (46) 4 (47)

Leave a Reply