பிரித்தானியாவில்  சீக்கியர் மீது இனவெறித் தாக்குதல் (வீடியோ)இணைப்பு!

பிரித்தானியாவில் சீக்கியர் மீது இனவெறித் தாக்குதல் (வீடியோ)இணைப்பு!

இங்கிலாந்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தியதற்கு பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
.
 இங்கிலாந்தில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலை தளமான பேஸ்புக்கில் பரவி பார்க்கும் அனைவரையும் உலுக்கி வருகிறது.
1427869541-1181
இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பிரகாஷ் சிங் பாதல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இச்செயல் மனிதாபிமானமற்றது. கொடூரமானது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. பிரிட்டனில் சிறுபான்மை சமூகத்தினர் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இனி வரும் காலங்களில் இது போன்ற தாக்குதல் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அந்நாட்டு அரசு பல்வேறு கலாச்சார அடையாளம் கொண்ட சமூகங்களை ஏற்றுக்கொண்டுள்ளதை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது..
 
அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சீக்கியர்கள் எப்படி பாடுபட்டு வருகின்றனர் என்பதை லண்டனில் உள்ள இந்திய தூதர் பிரிட்டன் அரசிடம் எடுத்துக்கூறவேண்டும். இவ்வாறு பிரகாஷ் சிங் பாதல் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply