தீவகம் வேலணை கிழக்குக் கடற்கரையின் அழகிய தோற்றத்தினையும்-அதன் அருகினிலே அமைந்துள்ள ஆட்டுப்புலத்து வைரவர் கோவிலையும்-கடற்கரையின் பக்கங்களில் காணப்படும் ஈச்சம் பற்றைகளில் காய்த்துக் கிடக்கும் ஈச்சம்பழங்களையும்-உங்கள் பார்வைக்கு நிழற்படங்களாகப் பதிவு செய்து கீழே இணைத்துள்ளோம்.
அத்தோடு வேலணை கிழக்குக் கடலில் பல லட்சம் ரூபாக்கள் முதலிடப்பட்டு-அட்டை வளர்ப்பிலும்-பாசி வளர்ப்பிலும்,வேலணை கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பதனையும்,படங்களாகப் பதிவு செய்துள்ளோம்.