மண்டைதீவு கண்டுப்புளியடி சிவ உக்கிர வீரபத்திரர் ஆலயம்- புலம்பெயர் மண்டைதீவு மக்களின் நிதிப் பங்களின் மூலம் முற்று முழுதாக மாற்றியமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இத் திருப்பணிகளுக்கான நிதிகள் புலம்பெயர் மற்றும் உள்நாட்டு மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் வெகுவிரைவில் இப் பணிகள் முடிவுறுத்தப்படும் எனவும் மேற்படி ஆலயத்தின் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
மேலும் இப் பணிகளுக்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் ஆலயத்தின் பரிபாலன சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
அத்துடன் இவ் ஆலயத்தின் அருகில் பூசகர் தங்குமிடம் மற்றும் மடப்பள்ளி போன்றவற்றுக்கு ஏதுவான கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி-திருவெண்காடு இணையம்