வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட-தீவகம் சிறுத்தீவு பகுதியில் அமையவுள்ள,சுற்றுலாத்தளத்திற்குச் செல்வதற்கான இறங்கு துறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் கோட்டைக்கு தென்கிழக்குப் பக்கமாகவும்-மண்டைதீவு பிரதான வீதிக்கு வடக்குப்பக்கமாகவும், கடலின் நடுவே கண்ணாப்பற்றைகள் நிறைந்து காணப்படுகின்ற,பகுதியே சிறுத்தீவு என அழைக்கப்படுகின்றது.
இச்சிறுத்தீவுப் பகுதியிலேயே,தனியொருவரினால் சுற்றுலாத்தளம் அமைக்கப்படவுள்ளதாகவும்-இதற்கான அனுமதியினை,முன்னாள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் பெற்றுக் கொடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் கடந்த வருடம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,முன்னாள் ஆளுநர் சந்திரசிறி,மற்றும் வேலணை பிரதேசசபைத் தலைவர் சின்னையா சிவராசா மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு இச்சுற்றுலாத் தளத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த நிகழ்வு இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.