மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகனின் பஞ்சதளத்தின் 5வது தளத்தினை அமைத்துத்தர முன்வந்துள்ள பரிஸ் வர்த்தகர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகனின் பஞ்சதளத்தின் 5வது தளத்தினை அமைத்துத்தர முன்வந்துள்ள பரிஸ் வர்த்தகர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

06

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்டைதீவு திருவெண்காடு  சித்திவிநாயகப் பெருமானுக்கு ,பஞ்சதள இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் முனைப்புடன் நடைபெற்று வருவது நீங்கள் ஏற்கனவே அறிந்த செய்தியாகும்.வேகமாக அமைக்கப்பட்டு வரும் பஞ்ச தளத்தின் நான்காவது தளத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில்…ஜந்தாவது தளத்தினை,அமைத்துத் தருவதற்கு  முன் வந்துள்ளார்-வேலணையைச் சேர்ந்த,பிரான்ஸ் பரிஸின் பிரபலமான சர்வதேச நாணய மாற்று நிறுவனத்தின் (FIRST & BEST CHANGE) உரிமையாளர் திரு குலசேகரம்பிள்ளை சிறிஸ்கந்தராஜா( சிறி) அவர்கள்-அவருக்கு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் ,திருவருள் துணை கிடைக்க வேண்டி நிக்கின்றோம்.

எம்பெருமானின் பஞ்சதள இராஜகோபுரத் திருப்பணிகள் முழுமை பெற- மேலதிக வேலைகள் (வர்ணம் பூசுதல்,சிற்பவேலைப்பாடுகள்,பொம்மைகள் அமைத்தல் )  செய்ய வேண்டியிருப்பதனால்…நீங்களும் மனமுவந்து நிதி உதவியினை  வழங்கி,  சித்தி விநாயகப் பெருமானின் பேரருளினைப் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

P1080492 P1080493 first-2-651x102400000P1080481

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux