அல்லைப்பிட்டி பங்கு மக்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட-சிலுவைப்பாதை ஆராதனை நிகழ்வு கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
நம் பாவ – சாபங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆராதனை. நம் சொந்த பாவங்களும், நம் முன்னோரின் பாவங்களும், நமக்கும் நம் குடும்பத்துக்கும், பெரும் சாப மோசங்களைக் கொண்டு வந்துள்ளன. இந்த பாவ சாபத்தின் விளைவே, இயேசுவின் சிலுவைப்பாதை.
நம் அன்றாட சிலுவையை நாள்தோறும் சுமந்து, இயேசு சுமந்த பாவ சாபங்களில் நாமும் பங்கு பெற்று, இந்த ஆராதனையில் விசுவாசத்தோடு, பங்கெடுக்கும் போது, நம்முடைய பாவ சாபங்களிலிருந்து, நமக்கும் நிச்சயம் விடுதலை கிடைக்கும். ஆமென்.