சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ அவர்கள்-சிங்கப்பூர் தேசத்தை நிறுவியவர் ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இவர், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
சிங்கப்பூரில் கடந்த 1959 முதல் 1990 வரை பிரதமராக பதவி வகித்தவர் லீ குவான் யூ. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவி வகித்த இவர், சமீபகாலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த, லீ குவான் தனது 91 வது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு வரும் 29-ல் நடைபெறுகிறது.இறுதி யாத்திரையில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.