அல்லைப்பிட்டியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாலயத்தின் மூலஸ்தானப்பகுதி முழுமையாக இடித்து அகற்றப்பட்டு-மிகப்பிரமாண்டமாகவும், விசாலமாகவும் மூலஸ்தானம் அமைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.அத்தோடு பரிவார மூர்த்திகளுக்கும் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
ஆலய தர்மகர்த்தா பெரியவர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் மேற்பார்வையில் புனரமைப்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அறியமுடிகின்றது.ஆலய தர்மகர்த்தா பெரியவர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் புதல்வர்கள்,மற்றும் உறவினர்களே ஆலய புனரமைப்புக்கு முன் நின்று உதவிவருவதாகவும்-மேலும் ஊர்மக்களிடமிருந்தும் உதவிகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிய வருகின்றது.