யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய,வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி கடந்த,13-03-2015 வியாழக்கிழமை அன்று வித்தியாலயத்தின் முதல்வர் திருமதி சத்தியபாமா தர்மகுலேந்திரன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக,அருட் தந்தை ஜோதிநாதன்( பங்குத் தந்தைபுனித சபேரியார் ஆலயம்)அவர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக,வேலணை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சிவானந்தராஜா அவ்களும்-மற்றும் முன்னைநாள் அதிபரும்,தற்போதைய நயினாதீவு நாகபூசணி வித்தியாலய அதிபருமான திரு ச.சிறிதரன் அவர்களும்-மற்றும் பிரான்ஸ் ஒன்றிய உறுப்பினரான திருமதி அன்ரனிக் அம்மா அவர்களும்-மற்றும் வட இலங்கை சர்வோதய அமைப்பாளர் திருமதி பொ.ஜமுனாதேவி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததாகவும்-தெரிவிக்கப்பட்டுள்ளது.