“பெண்கள் 20 ” என்ற அமைப்பில்,பிரான்ஸில் தெரிவான நம்மூர் மாணவி-விபரங்கள் வீடியோ இணைப்பு!

“பெண்கள் 20 ” என்ற அமைப்பில்,பிரான்ஸில் தெரிவான நம்மூர் மாணவி-விபரங்கள் வீடியோ இணைப்பு!

கனடாவினை தலைமையகமாகக்  கொண்டு-பெண்கள் 20 (girls 20) என்ற அமைப்பு  செயற்பட்டு வருகின்றது.இவ்வமைப்பானது தற்போது 27 நாடுகளில் 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்ட பெண்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, பின்னர் அவர்களுக்கு பல கட்டமாக பரீட்சைகளை  நடத்தி-அவற்றிலிருந்து இறுதியாக ஒரு பெண் உறுப்பினரை  தேர்வு செய்கின்றது.

இதில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் செயற்பாடுகளாவன-

அவர்கள் வசிக்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும்-பெண்களின் உயர் கல்வி,தொழில்,ஊதிய வளர்ச்சி,உயர்பதவி,போன்றவற்றிக்காகவும் வாதாடி வருகின்றனர்.இவ்வமைப்பானது ஒவ்வொரு வருடமும் மீள் தெரிவினை மேற்கொண்டு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்து வருகின்றது.

இவ்வமைப்பினால் பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட 2015 ம் ஆண்டுக்கான புதிய உறுப்பினரைத் தேர்வு செய்யும் பரீட்சையில் கலந்து கொண்ட-இலங்கையைச் சேர்ந்த,செல்வி ஸ்ரனிலாஸ் அனுசிகா அவர்கள் இறுதித் தேர்வில் தெரிவு செய்யப்பட்டு-பிரான்ஸின் “பெண்கள் 20 ” அமைப்பின்  உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருடைய,பெற்றோர்கள் அல்லைப்பிட்டி-மண்கும்பானைச் சேர்ந்தவர்கள் என்பது எமக்கு பெருமை சேர்க்கும் தகவலாகும்.

செல்வி அனுசிகா ஸ்ரனிலாஸ் அவர்கள்-இம்முறை துருக்கியில் நடைபெறவுள்ள-“பெண்கள் 20 “அமைப்பின் பொதுக்கூட்டத்திற்கு, பிரான்ஸ் நாட்டின் உறுப்பினராக கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவி-செல்வி அனுசிகா ஸ்ரனிலாஸ் அவர்கள் மேன்மேலும் புகழ் பெற வேண்டும் என்று எங்கள் கிராமத்து மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையத்தின் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.

http://www.girls20.org/2015delegates/

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux