வேலணை பிரதேசசபையினால்,தீவகம் சாட்டியில் அமைந்துள்ள அந்தியேட்டி மடத்திற்குச் செல்வதற்கான புதிய வீதியொன்று அண்மையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலணை சாட்டி வெள்ளைக் கடற்கரைக்கு,மிக அண்மையாக அமைந்துள்ள அந்தியேட்டி மடத்திற்கு வாகனங்கள் நேரடியாகச் செல்லமுடியாதிருந்த,நிலையிலேயே- அதை நிவர்த்தி செய்யும் முகமாக – வேலணை பிரதேசசபையினால் இப்புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்டி ஊடாகச் செல்லும் பிரதான வீதியிலிருந்து சுமார் முன்நூறு மீற்றர் தொலைவிலேயே அந்தியேட்டி மடம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.