தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானுக்கு அமைக்கப்பட்டு வரும் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதளத்தின் நான்காம் தள கட்டுமானப் பணி நிறைவடைந்து ஐந்தாம் தளத்தை நோக்கி பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன .
எனவே இப் பெருங் கைங்கரியத்தில் நீங்களும் இணைந்துகொண்டு எம் பெருமானின் பேரளுனினை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
ஓம் கம் கணபதயே நமஹ…!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
“திருச்சிற்றம்பலம்” ” திருச்சிற்றம்பலம்” “திருச்சிற்றம்பலம்’