மண்டைதீவில் கடந்த வருடம் வடமாகாண முதலமைச்சர் திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட-பிரதேச வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து-நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்டைதீவில் 1954ஆம் ஆண்டு கட்டப்பட்ட பிரதேச வைத்தியசாலையானது-நீண்ட காலமாக,மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சேவையினை வழங்கி வந்தநிலையில் கடந்த கால யுத்த அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்திருந்தது.மீண்டும் அதே இடத்தில் 26 மில்லியன் ரூபா செலவில் புதிதாக வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு மக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வேலணை வைத்தியசாலை மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் இருந்து இரு மருத்துவர்கள் வாரத்தில் இரு நாட்கள் இப்பகுதி மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.