யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருநாள் விழா-08-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.முதல் தடவையாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக மேலும் அறிய முடிகின்றது.யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருநாள் விழாவில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் முதல் முறையாக- பாலைதீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருநாளினை பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.