யாழ் தீவகம் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையம் கடந்த சில தினங்களாக முன்னறிவித்தல் இன்றி மூடப்பட்டுள்ளதனால்,நாளாந்தம் வாகனங்களில் பயணிக்கும்-இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எரிபொருள் நிரப்ப முடியாமல் பெரும் சிரமப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த எரிபொருள் விற்பனை நிலையம் தொடர்ந்து மூடப்பட்டு இருக்குமா?அல்லது மீண்டும் திறக்கப்படுமா? என்பது பற்றி வேலணையைச் சேர்ந்த,பொதுமகன் ஒருவரிடம் கேட்ட போது-இது தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளதாக அவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.