கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா 28-02-2015 சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மறுநாள் 01-03-2015 ஞாயிற்றுக்கிழமை முதலாம் திகதி வரை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 7689 பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இப்பெருந்திருவிழாவினை-முதல் தடவையாக புதிய கோணத்தில் முழுமையாக வீடியோப் பதிவு செய்து -உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
கச்சதீவு புனித அந்தோனியாரின் பெருநாள் திருவிழாவினை பதிவு செய்த,எமது பிரதான வீடியோப்பதிவாளர்களான-நயினை அபிராமி வீடியோப் பதிவாளர்களுக்கும்-
கச்சதீவு புனித அந்தோனியாரின் பெருநாள் திருவிழாவினை-உலகத்தமிழர்கள் பார்வையிடுவதற்காக-நிதி அனுசரணையினை பரிஸ் லாசப்பல் பகுதியில் பிரபலமான-K.M.S .BIJOUTERIE நகைமாடம் மற்றும் பரிஸின் புறநகர் பகுதியான Bondy இல் அண்மையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட SALENGRO SUPER MARCHE -58,60 rue Roger salengro பல்பொருள் அங்காடியின் உரிமையாளருமாகிய,திரு கதிர்காமு மோகனசுந்தரம் அவர்கள் வழங்கியிருந்தார்.
இவர்களுக்கு கச்சதீவு புனித அந்தோனியாரின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுகின்றோம்.