தப்பி ஓடிய எயிட்ஸ் நோயாளியை தேடி யாழ்.பொலிஸார் வலை வீச்சு

எயிட்ஸ் நோயாளியான இளைஞன் ஒருவர் (வயது 24) யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடி உள்ளார்.
வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இவ்விளைஞன் இரு கிழமைகளுக்கு முன்னர் யாழ். பண்ணையிலுள்ள மார்பு நோய் வைத்தியசாலையில் வைத்து எயிட்ஸ் நோயாளி என அடையாளம் காணப்பட்டார்.

பின்னர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரத்தப் பரிசோதனை மேற்கொண்டு எயிட்ஸினால் பீடிக்கப்பட்டிருக்கின்றமையை இவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இவர் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இவர் தப்பியோடியமை யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார் இவரைத் தேடி வருகின்றனர்.

Leave a Reply