கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் பூர்த்தி-விபரங்கள் இணைப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் பூர்த்தி-விபரங்கள் இணைப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இந்த வருடம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய, இலங்கை யாத்திரிகர்கள் பங்குபற்றுவர் என எதிர் பார்க்கப்படுகிறது.    திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

10915114_820229448049773_61662467566990710_o

 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்  யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:   கச்சதீவுத் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக 28 ஆம் திகதி அதிகாலை 4 மணியில் இருந்து இலங்கைப் போக்கு வரத்தச் சபையின் பஸ்களும், காலை 5 மணியிலிருந்து தனியார் பஸ்களும் யாழ்.நகரில் இருந்து குறிகாட்டுவான் வரை சேவையில் ஈடுபடும். இதற்காகப் பொதுமக்களிடம் இருந்து 72 ரூபா கட்டணமாக அறவிடப்படும்.

10349889_820229838049734_1673328476398653005_n  

இதேவேளை, குறிகாட்டுவானில் இருந்து கச்சதீவுக்குச் செல்வதற்கு காலை 6 மணியில் இருந்து தனியார் படகுகள் ஏற்பாடு செய்யப்பட் ள்ளன. இதற்கு ஒரு வழிக் கட்டணமாக 225 ரூபா அறவிடுவதாகப் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.    பிற்பகல் 2 மணி வரை இந்தச் சேவை இடம்பெறும். அதன் பின்னர் மறுநாள் முதலாம் திகதி கச்சதீவில் இருந்து யாத்திரிகர்களைக் கொண்டு வருவதற்குப் படகுகள் சேவையில் ஈடுபடும்.     இந்தத் திருவிழாவுக்கு இந்தியாவில் இருந்து 4 ஆயிரத்து 200 பக் தர்களும், இலங்கையில் இருந்து கலந்துகொள்வதற்கு 2 ஆயிரம் பக் தர்ளும் பதிவு செய்துள்ளார்கள்.    மேலும் திருவிழாவுக்கான பாதுகாப் புக்கு 150 பொலிஸ் உத்தியோகத் தர்கள் பாதுகாப்புக் கடமையிலும், பக்தர்களின் நலன் கருதி அம்புலன்ஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடும்.

அத்துடன் திருவிழாக் காலத்தில் இரவு, காலை உணவுகள் வழங்கு வதற்கு கடற் படையினர் மூலம் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   திருவிழாவுக்கு வருகை தரும் யாத்திரிகர்கள் சூழலைப் பாதுக் காத்துக்கொள்ள பிளாஸ்ரிக் பொருள்கள், பொலித்தீன் பொருள்கள் பாவிப்பதை முற்றுமுழுதாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.   இதேவேளை, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 4 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மறுநாள் காலை 7 மணிக்குப் பெருவிழா நடைபெறும்.  

யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு. ஜஸ்ரின் ஞானப்பிர காசம் அடிகளார் தலைமையில் இந்தியாவில் இருந்து வரும் குரு முதல்வர்களுடன்  கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.    திரு விழாவுக்காக இந்திய, இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் கிறிஸ்தவ மதக்குருக்கள், கன்னியாஸ்திரிகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.   இந்தக் கலந்துரையாடலின்போது கிறிஸ்தவ மதகுருமார்கள், கடற்படையினர், பொலிஸார் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.            

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux