அல்லைப்பிட்டியைப், பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-திரு கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நான்கு மணியளவில் அல்லைப்பிட்டியில் அகாலமரணமானார்-
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலை அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளை தவிர்க்க முடியாத சில காரணங்களினால் பதிவு செய்ய முடியவில்லை-இருந்த போதிலும் நாம் எடுத்துக் கொண்ட கடும் முயற்சியின் பலனாக-கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட-சில நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
அமரர் சிவலிங்கம் அவர்கள் அல்லைப்பிட்டியில் விவசாயத்தில் ஈடுபடும் விரல் விட்டு எண்ணக்கூடிய விவசாயிகளில் ஒருவராகவும்-சிறந்த விவசாயியாகவும் விளங்கி வந்ததுடன்-அல்லைப்பிட்டியில் புதிதாக வீடு ஒன்றினை அமைத்து அண்மையில் புதுமனை புகுவிழாவினையும் நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக தொடர்புகளுக்கு***0094214907723