பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர் jacque audiard இப்போது இயக்கும் படம் ‘தீபன்’. ஈழத்தின் யுத்தச் சூழலில் இருந்து தப்பித்து புலம்பெயர்ந்து பிரான்ஸுக்குள் வந்த மூன்று பேரைப் பற்றியது. அகதியாக வந்து புது நாட்டில் புதுச் சூழலில் எப்படி இவர்கள் வாழ்கிறார்கள், வாழ்க்கையை, எப்படி எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது இதன் கதை. அந்த மூவரில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தான் நடித்து முடித்து விட்டார்-எங்கள் அல்லைப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த,பிரபல எழுத்தாளர் திரு ஷோபா சக்தி அவர்கள்.இப்படம் இந்த வருடம் நடைபெறவுள்ள Festival De Cannes இல் திரையிடப்படவுள்ளதாக ஊர்ஜிதப்படுத்த முடியாத செய்தியொன்று தெரிவிக்கின்றது.
அரசியல் விமர்சனங்களுக்கு அப்பால்-நண்பன் ஷோபாசக்தி பற்றி…..
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வன் யேசுதாசன் அன்ரனிதாசன்(ஷோபாசக்தி) அவர்கள் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.சமகாலத்தின் சிறந்த கதை சொல்லிகளில் ஒருவரான ஷோபா சக்தி அவர்கள் எழுதிய ‘கொரில்லா’ முதல் ‘கண்டி வீரன்’ வரையிலுமான நாவல்கள் கல்விமான்களால் பெரிதும் வியந்து பேசப்படுகின்றது.அவர் ஏற்கனவே திரைப்படத் துறையில் நுளைந்திருந்தாலும்-தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் பிரஞ்சுத் திரைப்படம்-மேலும் அவருக்கு பெரும் புகழையும்,பெரும் மாற்றத்தையும் தரப்போவது உண்மையாகும்.
தான் பிறந்த மண்ணான ,அல்லைப்பிட்டி என்னும் சிறுகிராமத்திற்கு,உலக அளவில் பெயரையும்-புகழையும் சேர்க்கும்-திரு ஷோபாசக்தி அவர்களை-அல்லையூர் இணையத்தின் சார்பிலும்-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.