மகா சிவராத்திரியை,முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்தில் குவிந்த இலட்சக்கணக்கான பக்தர்கள்-படங்கள் இணைப்பு!

மகா சிவராத்திரியை,முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்தில் குவிந்த இலட்சக்கணக்கான பக்தர்கள்-படங்கள் இணைப்பு!

இம்முறை மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் நடைபெற்ற, சிவராத்திரி வழிபாட்டில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

11014988_1397318120577232_2169203343845895835_n 11016824_1397318520577192_1132059839865083011_n 10990888_1397318787243832_8235573389046143523_n 10978598_1397319833910394_6218438634304523069_n 1013648_1397319727243738_514628384427650061_n 10983392_1397319180577126_876347483598083065_n 10347780_1397318490577195_222979990267997327_n 10993116_1397320727243638_5209941220061501407_n 10991365_1397319907243720_2143188308482878013_n 10846056_1397321543910223_4456787261249670267_n 10405419_1397320623910315_5812408315553448523_n 10384458_1397320733910304_5048435781155617652_n 10940984_1397321233910254_5945217142889556177_n  

செவ்வாய்க்கிழமை இரவு 6 மணிக்கு முதலாம் யாம பூசையில் அஸ்டோத்திர சத கலச அபிஷேகம் (108 கலசம்) நடைபெற்றது.   8 மணிக்கு முதலாம் யாமப் பூசை நடைபெற்றது. 9 மணிக்கு இரண்டாம் யாமக் கும்ப பூசையும் ஏகோனத பஞ்சசதக் கலச அபிஷேகமும் (49 கலசம்) நடைபெற்றது.   

அன்று இரவு 10 :30 மணிக்கு இரண்டாம் யாமப் பூசையும், இரவு 11 மணிக்கு மூன்றாம் யாம கும்ப பூசையும் பஞ்சவிம்சத கலச அபிஷேகமும் (25 கலசம்), நள்ளிரவு 12:15க்கு மூன்றாம் யாம இலிங்கேற்பவ பூசையும், பின்னிரவு 2 மணிக்கு நான்காம் யாம சப்த சத கலசஅபிஷேகம் (17 கலசம்) நடைபெற்றது.   

அன்று பின் இரவு 3 மணிக்கு நான்காம் யாம பூசையும் நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு அர்த்தயாமப் பூசை, திருக்கதவடைத்தல், திருவனந்தல், காலப்பூசை என்பன நடைபெற்றது.   5.30 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூசை, சுவாமி திர்தத்திற்கு எழுந்தருளல், பாலாவியில் தீர்த்ம் கொடுத்தல் என்பனவும் நடைபெற்றது.

 இலங்கையின்  பல பாகங்களிலும் இருந்து வந்த இலட்சக்கணக்கான சிவ பக்தார்கள் இவ்வழிபாடுகளில் ஒன்றுகூடி  கலந்து சிவன் அருள் பெற்றுய்தனர். 

நன்றி-திரு மாணிக்கவாசகர் பொன்னையா

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux