பரிஸ் Métroவில் நிற வெறியினைத் தூண்டிய பிரித்தானிய உதைபந்தாட்ட ரசிகர்கள்-வீடியோ படங்கள் இணைப்பு!

பரிஸ் Métroவில் நிற வெறியினைத் தூண்டிய பிரித்தானிய உதைபந்தாட்ட ரசிகர்கள்-வீடியோ படங்கள் இணைப்பு!

பரிஸ் மெற்ரோவினுள்  பிரித்தானிய உதைபந்தாட்ட ரசிகர்களில் சிலர்-நிற வெறியினைத் தூண்டும் முகமாக நடந்து கொண்டுள்ளதாக -The Guardian என்னும் இணைய பத்திரிகையில் ஆதாரத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை மாலை பரிஸில் -PSG-Chelsea ஆகிய இரண்டு அணிகளுக்கிடையே  நடைபெற்ற,உதைபந்தாட்டத்தினைக் காண வந்த பிரித்தானிய ரசிகர்களில் சிலரே-பரிஸ் மெற்ரோவினுள்  ஏற முற்பட்ட கறுப்பின நபரை ஏறவிடாது உதைத்துத் தள்ளியதாகவும்-தாங்கள் நிற வெறியர்கள் என்று கூச்சல் இட்டு மெற்ரோவினை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்காட்சியினை வீடியோவில் பதிவு செய்த ஒருவர்-பிரபல பத்திரிகையிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து இச் செய்தி காட்டுத்தீயாய் பரவி எதிர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

1000 1000 (3) 1000 (2)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux