அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள் 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-02-2015 புதன்கிழமை காலை சுதுமலையில் நடைபெற்ற போது -அன்னாரின் உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்-அத்தோடு அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-முழுமையான வீடியோப் பதிவும் விரைவில் இணைக்கப்படும்-என்பதனையும் அறியத்தருகின்றோம்.
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள் 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை(உடையார்), சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்(பண்டிதர்), தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், ஞானசம்பந்தன்(முன்னாள் பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர், சமாதான நீதவான்- சுதுமலை தெற்கு) அவர்களின் பாசமிகு மனைவியும், பவானி(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும், ஸ்ரீதரன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தவவிநாயகம்(முன்னாள் கிராமத்தலைவர், கிராமசபைத் தலைவர்), வேலாயுதப்பிள்ளை, சிவயோகலட்சுமி, நடேஸ்வரி, மற்றும் நடேசபிள்ளை(தொழில் அதிபர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், கிருஸ்ணாம்பாள்(பிரான்ஸ்), இராசம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(தபால் அதிபர்- அல்லைப்பிட்டி), சச்சிதானந்தன்(இளைப்பாறிய உதவி் ஆணையர்), மற்றும் மங்கையற்கரசி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவானந்தன், கஜவல்லி, கேதீஸ்வரநாதன், கெளரிநாயகி, சொர்ணநாயகி, றங்கநாயகி, யோகநாதன், பிரபாகரன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும், காலஞ்சென்ற உருத்திரகுமார், சத்தியபாலினி, கிருபாலினி, சந்திரகுமார், சூரியகுமார், தவபாலினி, ஜெயபாலினி, குணபாலினி, ஜெயசுந்தரராசா, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா, சியாமளா, மஞ்சுளா, சோமேஸ்வரி, காலஞ்சென்ற லோகேந்திரா, தெய்வேந்திரா, விஜந்திரா, கஜந்தினி, சுதாஜினி, துஷ்யந்தன், கஜநேசன், கமலினி, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும், சங்கரன், ஹரிகரன், சக்கரவர்த்தி, பத்மஸ்ரீ, சுவர்ணஸ்ரீ, லஷ்மிஸ்ரீ, சரவணன், ஸ்ரீதேவி, சம்பத்குமார் ஞானகி, அருள்நேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், தனுஷ்கா, நிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|