யாழ் தீவகம் எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்துக்கு மடிக்கணனியும், வித்தியாலய மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதியும் நல்லூர் றோட்டறிக் கழகத்தினரால் 17-02-2015 செவ்வாய்கிழமை அன்று வித்தியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்குரிய செயற்திட்ட இயக்குநராக றோட்டறியன் திரு.ப.ஜனார்த்தன் (நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகம், தெல்லிப்பளை) அவர்கள் செயற்பட்டார்.என்றும் உத்தியோகபூர்வமாக சில மாணவர்களுக்கு அன்றைய தினம் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டதாகவும். ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் நடைபெறவுள்ள இல்ல மெய்வல்லுநர் போட்டியின் போது வழங்கப்படவிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.