யாழ் தீவகம் நயினாதீவில் அமைந்துள்ள-ஸ்ரீ கணேச கனிஸ்ட மகா வித்தியாலயத்தின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி கடந்த,16-02-2015 திங்கட்கிழமை அன்று வித்தியாலய அதிபர் திரு வீ.ஓங்காரலிங்கம் அவர்களின் தலைமையில் ஸ்ரீ கணேச கனிஸ்ட மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக,வடமாகாண சபையின் உறுப்பினர் திரு பா.கஜதீபன் அவர்களும்-அதி சிறப்பு விருந்தினராக,தீவக வலயக்கல்விப்பணிப்பாளர் திரு ஜோன் குயின்ரஸ் அவர்களும்-சிறப்பு விருந்தினராக,வேலணை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு பொ. சிவானந்தராஜா அவர்களும் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிழற்படங்கள்-நயினை எம்.குமரன்