தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு-ஜம்பது அடி உயரத்தில்,அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்-அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும்,தெரிவிக்கப்படுகின்றது.
தீவகத்திலேயே அழகிய கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட-முதலாவது உயர்ந்த கோபுரமாக,கிசிேபyச பேசப்படும் என்று-இக்கோபுரத்தினை அமைத்து வரும் சிற்பாச்சாரியார் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.முழுமையான கட்டிடப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்-வர்ணம் பூசுவது மட்டுமே மீதி உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு தற்போது மிகப்பிரமாண்டமாக,அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுர கட்டுமானப்பணிகளுக்குப் பொருந்தாத இடத்தில் அமைந்திருந்த, பழைய மணிக்கூட்டுக் கோபுரம்முற்றாக இடித்து அகற்றப்பட்டு-அதற்குப் பதிலாகவே அழகிய இப்புதிய மணிக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.