அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் புதுமனைப் புகுவிழா கடந்த 09-02-2015 திங்கட்கிழமை அன்று மிகச் சிறப்பாக அல்லைப்பிட்டியில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் கோவிலில் விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து-சாமிப்படங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு-புதுமனையில் மேலும் பூஜை செய்து பால்காச்சப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களினால்-அல்லையூர் இணையத்தின் பதிவு செய்யும்படி அனுப்பி வைக்கப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
அல்லைப்பிட்டியில் தற்போது விவசாயத்தில் ஈடுபடுகின்ற,விரல்விட்டு எண்ணக்கூடிய விவசாயிகளில் -திரு கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் முக்கியமானவராகவும்-அனுபவ விவசாயியாகவும்-மேலும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றார்-என்பதனையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.