அல்லைப்பிட்டியில் அழிவிலிருந்த சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தினை புனரமைத்து -மக்களின் வழிபாட்டிற்கு வழி செய்து கொடுப்பதற்காகவும்-பழைமையான ஆலயத்தினை அழிய விடாமல் பாதுகாப்பதற்காகவும்-அல்லைப்பிட்டி மக்களுடன் இணைந்து அல்லையூர் இணையம் மேற் கொண்ட விடாமுயற்சியின் பயனாக-தற்போது ஆலயப்புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்-ஆலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான நாட்கல்லும்-11-02-2015 புதன்கிழமை அன்று நாட்டப்பட்டுள்ளது.
பல இலட்சம் ரூபாக்கள் செலவில் ஆலயத்தின் சுற்றுமதிலினை அமைப்பதற்கு -திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள் முன் வந்துள்ளதுடன்-அப்பணியினை உடனே ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதியினையும் அனுப்பி வைத்ததைத் தொடர்ந்தே நாட்கல் நாட்டப்பட்டுள்ளது.
திரு எஸ்.ஆர் அவர்கள் அறப்பணிக்கும்,ஆலயப்பணிகளுக்கும் தொடர்ந்து உதவிவருவதுடன்-ஊர் மக்களுக்கும் உதவிகளைச் செய்து வருபவர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தினால் இதுவரை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நம்மவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து ஜம்பது ஆயிரம் ரூபாக்கள் திரட்டப்பட்டு-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மூலம் ஆலய நிர்வாகத்தின் பொருளாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதற்கான பற்றுச்சீட்டுக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வேண்டுகோள்
புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் அல்லைப்பிட்டி மக்கள்-சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய புனரமைப்புக்கு உதவிட முன்வருமாறு அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.