யாழ் நல்லூர் முருகன் ஆலயத்திலும்- இணுவில் கந்தசுவாமி ஆலயத்திலும் நடைபெற்ற-மஞ்சத்திருவிழாவின் நிழற்படத்தொகுப்பு!

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்திலும்- இணுவில் கந்தசுவாமி ஆலயத்திலும் நடைபெற்ற-மஞ்சத்திருவிழாவின் நிழற்படத்தொகுப்பு!

தைப்பூசத்தை முன்னிட்டு,யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்திலும்- மஞ்சத்திற்குப் புகழ்மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலயத்திலும் நடைபெற்ற- மஞ்சத் திருவிழாவின் நிழற்படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே யாழ் இணுவில் கந்தசுவாமி ஆலய மஞ்சம்தான்   உயரமான மஞ்சம் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாலயத்தில் வள்ளி-தெய்வானை சமேதரராய் ஆறுமுகப்பெருமான் தைப்பூச திருநாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மஞ்சத்தில் எழுந்தருளி காட்சி தந்தார் என்றும் இக்காட்சியினைக் காண  யாழ். குடாநாட்டில் இருந்தும் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு  வந்தனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை எட்டிப்பிடித்துள்ள இந்த மஞ்சத்தைப் போன்று ஒரு மஞ்சம் இலங்கையிலோ, இந்தியாவிலோ, வேறு உலகின் பகுதிகளிலோ காணமுடியாது என தொல்பொருள் ஆராச்சியாளர் பலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

உலக பெருமஞ்சம் இது தான் என வரலாற்று அறிஞர்கள் பாராட்டியுள்ளார்கள். இந்த மஞ்சம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு, நன்கு பேணுவதற்காக நாற்பதடி உயரமான மஞ்சக் கொட்டகையும் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

10636402_324413881081503_4547730800854519757_o

நன்றி-எஸ்.சிவதாஸ்

நன்றி-தினக்கதிர் இணையம்

 10873550_324413887748169_2911869893240524482_o 10856722_324413914414833_7612951619611259274_o

 

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற-மஞ்சத்திருவிழாவின் நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

 

THAIPOOSA_MANCHAM_2015_05 THAIPOOSA_MANCHAM_2015_10 THAIPOOSA_MANCHAM_2015_13 THAIPOOSA_MANCHAM_2015_06 THAIPOOSA_MANCHAM_2015_02 THAIPOOSA_MANCHAM_2015_09 THAIPOOSA_MANCHAM_2015_07

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux