தீவகம் குறிகட்டுவானிலிருந்து ,கச்சதீவு புனித அந்தோனியார் பெருநாள் விழாவிற்குச் செல்ல-225 ரூபாக்கள் ஒருவழிக் கட்டணம்-விபரங்கள் இணைப்பு!

தீவகம் குறிகட்டுவானிலிருந்து ,கச்சதீவு புனித அந்தோனியார் பெருநாள் விழாவிற்குச் செல்ல-225 ரூபாக்கள் ஒருவழிக் கட்டணம்-விபரங்கள் இணைப்பு!

இம்மாதம் 28 மற்றும் மார்ச் 01ம் திகதி வரை இடம்பெறவுள்ள கச்சதீவு புனிதஅந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.  

katchathivu1

யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கச்சதீவு திருவிழாவை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக வடமாகாண சிரேஷ்ட பிரதிபொலிஸ்மாஅதிபர் லலித் ஜயசிங்க மற்றும்அந்தந்ததுறைசார்ந்தவர்களுடன்கலந்துரையாடப்பட்டது.  

யாத்திரிகர்களின்உணவு,சுகாதாரம்,குடிநீர்மற்றும்போக்குவரத்துஏற்பாடுகள்தொடர்பாகஇங்குகவனம்செலுத்தப்பட்டது.மேலும் யாழ்.குறிகட்டுவனில்இருந்து கச்சதீவு வரை படகு போக்குவரத்தில் ஈடுபடவுள்ள தனியார் படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அதற்கானஅனுமதிகளை வழங்குமாறும் ஒவ்வொரு படகுகளிலும்உயிர்காப்புஅங்கிகளை பயன்படுத்துமாறும் தனியார் படகுஉரிமையாளர் சங்கத்தினரிற்கு அரசாங்கஅதிபர் கோரிக்கை விடுத்தார்.     மேலும் இக்காலப்பகுதியில் ஒருவருக்கான படகுச்சேவைகட்டணமாக ஒருவழிப்பயணத்திற்கு ரூபா 225 அறவிடப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. 

யாழ்.நகரிலிருந்து குறிகட்டுவான் வரை எதிர்வரும் 28ம் திகதி காலை 6 மணியிலிருந்து நண்பகல் 2 மணிவரை தனியார் மற்றும்அரச பேருந்துகள் தொடர்ச்சியாக சேவையில்ஈடுபடவுள்ளன.     இதேவேளை  இந்தியாவிலிருந்து பக்தர்கள் வருகை தரவுள்ளதால் அவர்களின் வசதிகளுக்காக இந்திய நாணயங்களை இலங்கை நாணயமாக மாற்றக்கூடிய ஏற்பாடுகளுடன் கச்சதீவில் ஒரு உற்சவகால கிளையினை இலங்கை வங்கி அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.  

பொதுமக்களின்பாதுகாப்பிற்கென நூற்றிற்கும்மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தபடவுள்ளனர். பொலிஸ் திணைக்களத்தினர் நேற்றைய தின  கலந்துரையாடலின் போது தெரிவித்தனர்.     மேலும் இம்முறை கச்சதீவு பெருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து 3500ற்கு மேற்பட்ட யாத்திரிகர்களும் இலங்கையிலிருந்து 3500ற்கு மேற்பட்ட மொத்தமாக 7000ற்கு மேற்பட்டயாத்திரிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux